
ஒரு அடர் இருள்
நான் குளம் ஒன்றை கடக்கிறேன்
அதில் தனிமையான நிலவொளியின்
ரீங்கார நடனம்
நீர் தேக்கம் நிலவொளியை குளிர் நடுக்கமுர
அவை வலைந்தும் நெலிந்தும்
அப்போது
தூரத்தில் ஒரு தனியான அடரொளி,
மெல்ல மங்கியதாய் இருளை கவ்வியே
ஒளியை நோக்கியே நான் பயணிக்கிறேன்
தேவதைகளின் கல்லறையில்
நான் நடந்து செல்கிறேன்
ஓர் அழகான தேவதை அழுதுகொண்டு
அவளுடைய இறக்கைகள் உடைந்தும்
கிழிந்தும் காயங்களுடன்
அழுவதற்க்கும் வலுவிழந்தவளாய்
அவள் அழகில் இந்த உலகம் நிச்சயம் மயங்கும்
சொர்க்கத்தின் தோட்டத்திலிருந்து வீழ்ந்தவளாய்.
அவளுடைய ஆன்மா துளி கண்ணீருடன்
அங்கு அவளை கான இயலாதவளாய் தொலைந்தவளாய்
சிதைந்த தேகத்தை வீழ்ந்த தேகத்தை
பாரமாய் நினைத்து
ஒரு அச்சத்துடன் விட்டு சீறிப்பாய தயாராய்
சில்லென வீசும் காற்றோடு கலக்க தயாராய்
அவள் படுத்திருந்த சலவைகல்லின் வெப்பம்
அவள் மரணத்தை சற்று தாமதிக்க
அவளுக்கு உதவ நான் முயன்று தோற்கிறேன்
என்னுடைய தாமதமான பயணம்
அவளுடைய வேகமான மரணத்தை
மீட்க முயலாது வெட்கி குனிகிறேன்
குருதியின் குளத்தில் என் கால்களை நனைக்க செய்த
அவளுக்கு காலம் வெண்சலவைகல்லில் மரண நாட்களை
குறித்துவைத்து என்னை சீண்டியது
ஒரு கனமும் அசைவின்றி
தன் கண்களால் என்னை பார்க்கிறாள்
அவள் இதயம் அழும் ஓசை
மெல்ல என் செவிகளுக்குள் ஒலிக்க துவங்கியது
செங்குருதியின் குளத்தில் வெண்தாமரையாய் அவள்
மிதந்து மௌனமாய்.
நுட்பமான மென்பொருளாய்
கூர்மையான கண்களோடு அவள் வின்னை நோக்கி.
என் கண்கள் நனைந்து
குரூரமாய் என் நாபிஉடைய
என் குரல் அவள் பிரபஞ்சத்தை அடைய கத்தினேன்
அடுத்து யார், நீதான் கடவுளே,
இந்த குளம் உன்னையும்
உன் பாதங்களையும் நனைக்கும்.
இந்த குருதியின் வாசம்
உன் இந்த அண்டம் எங்கும் வீசும்
சுவாசிக்கும் ஒவ்வொரு உயிரையும்
இது சென்றடையும்
மௌனமாய் அவளை
என் கைகளில் தூக்கி முத்தமிட்டு,
அன்பாய் நெருக்கமாய் அனைத்து
என் உடல் வெப்பம் அவள் மரண நடுக்கத்தை
குளிர்காய செய்து
அவள் காதுகளின் ஓரமாய்
மெல்லிய குரலில்
இந்த மூர்கமான கொலைக்காக
அவன் விரைவில் பதில் சொல்லுவான் பயம் வேண்டாம் அன்பே
என்று சொன்னபோது...