Thursday, November 19, 2009

என்னுள்



அமைதி என் அறை வழியே நகர்ந்து
என்னை அங்கேயே நிலைக்க செய்கிறது
முன்னும் பின்னுமாய் அலறல் ஒலித்தே
அந்த அறைக்குள் தாவிக்கொண்டே இருந்தது
என்னுடைய முனுமுனுப்பு உங்களுக்கு
கேட்கிறதா என்று தவித்துத்தான் போகிறேன்

என் தலைக்குள் இருக்கும் சிறையிலிருந்து தப்பிக்க
ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறேன்
என் சுய நோய்க்குள் நானே சிக்கித்தவிக்கிறேன்
இந்த புவியோடு என்னை இணைக்கும்
அந்த கயிற்றை தேடுகிறேன்
இந்த அண்டம் இன்னும் பழுப்புநிற கார் மேகமாய்
இன்னும் மங்கலாய் ஒரு புள்ளியும் தெரியாமல்

இந்த மனிதநேயம் எங்கு சென்றது
நான் ஏன் அதை பின் தொடரவில்லை

என்னுள் இருக்கும் மிருகத்திடமே
இறையாகிறேன்

நீ என்னுடைய படைப்பு
கொடும் மூர்க்கமான படைப்பு
என்னுடைய அங்கம்
நீ என் இதயத்தில்
மெல்லமாய் துலையிட்டு நுழைந்துவிட்டாய்
இப்பொது என்னுள் நீ
தூய்மையற்றவனாய் நான்

உன் வார்த்தைகள் என்னை
பிணங்களின் மீதியை தின்னும் வல்லூராய் மாற்றியது
உன் கரும் கண்களின் சந்திப்பில்
மீண்டும் மீண்டும் மரிப்பதற்காகவே
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நீ என்னிடமிருந்து மிக சிறந்த ஒன்றை
உனக்காக எடுத்துக்கொண்டாய்

நீ என் இதயத்தை எடுத்துக்கொண்டாய்
அதை திருப்பிக்கொடு

என் நுண்ணிய உயிரணுக்களையும்
சேகரிக்கிறேன் அவைகளை அந்த பறவையின்
காலில் கட்டிவிடபோகிறேன்
எனதான்மா சொர்க்கத்தை அடைய அதுவே
சிறந்த வழி
இதிலிருந்து மீட்சி எனக்கு கிடையாது
எனக்கான இந்த வாழ்வு விதிவிலக்கல்ல
நான் இதழ்களற்ற ரோஜா
கொடும்மிருகம்


என்னுடைய சாம்பல் என்னை சுற்றியே
நான் மறக்கப்பட்டவனாய்
உங்களிடமிருந்து தொலைந்தவனாய்...

3 comments:

  1. இந்த மனிதநேயம் எங்கு சென்றது
    நான் ஏன் அதை பின் தொடரவில்லை

    என்னுள் இருக்கும் மிருகத்திடமே
    இறையாகிறேன்

    வாழ்கை ஒரு தீர்க்கமுடியாத முரண்பாடுதான்..
    உங்கள் கவிதைகள் தரமானவையாக இருக்கின்றன..தொடர்ந்து படித்து கருத்திடுவேன் பால்.

    ReplyDelete
  2. இந்த மனிதநேயம் எங்கு சென்றது
    நான் ஏன் அதை பின் தொடரவில்லை

    ReplyDelete