Sunday, November 15, 2009
மூர்க்கமான சூழ்ச்சி
குழப்பமான சூழ்ச்சியை உற்றுப்பார்
வானில் அவைகளை பார்
பார்க்கமுடிகிறதா
மேகங்கள் எப்படி அழுகிறது என்று பார்
அவைகளின் வலியையும் தனிமையும்
உன்னால் உணரமுடிகிறதா
அவைகளின் தனிமையை
பகிர்ந்து கொள்
கணிக்க முடியாத மூர்க்கமான சூழ்ச்சி
யாரையும் விட்டுவைக்காது
அதை கடந்து செல்வது கடினம்
அது மழையாய் தூறி வெள்ளமாய்
இந்த அண்டத்தை முழுமையாய்
நனைத்தே எங்கும் பரவி
சூழ்ச்சியின் மழை பிரமாண்ட மிருகமாய்
மறைந்த கரும் நிலத்தையும்
துறத்தி வேட்டையாடும்
மூர்க்கமாய் உழுத செந்நிற ரோஜா செடியும்
படர்ந்தகொடியும் வானை முட்டியே
அந்த செந்நிற ரோஜாவை பார்
குருதியின் தூரலில் குளிப்பதை
அவை வேகமாய் மலர்வதை பார்
உனக்கது தீர்ப்பிடுவதைப்பார்
அந்த கொடியால் நறுமனத்தோடு
அழகாய் நெய்யப்பட்ட
சூழ்ச்சிமிருகத்தின் பிரமாண்ட கூடு
அந்த மிருகத்தின் பற்கள் கூர்மையாய்
உன் தசைகளை கிழித்து இழுப்பதற்க்கு
உன் தேகம் எங்கும் வலியை நிரப்பும்
உன் கைகளை அது உடைத்து முறிக்கும்
உன் குருதியினை உறையவிட்டு செல்லும்
உன் வாழ்வை அது ஆதரமற்றதாய் மாற்றும்
உன் அடையாளங்களை அது அழிக்கும்
பயத்தின் கூட்டில் வசிக்காதே
சுதந்திரமாய் நட
வாழ்வை விட்டுக்கொடு மரித்துவிடு
மரணம் உனக்கு நண்பன்
அதனிடம் வெட்கப்படாதே
அண்டம் ஒலிக்க கூச்சலிடு
உன் கடைசி கண்ணீர் முடியும்வரை அழு
கடைசியாய் அதனிடம் கேள் ஏன் என்று
இறுதியாய் நீ அழுகியே மீண்டும் மண்ணுக்கே
அதுவும் தற்காலிக வசிப்பிடமாய்
வாழ்க்கையை சூழ்ச்சியை
அந்த பூமிக்கும் அடியிலிருந்து உற்றுப்பார்
அந்த ரோஜாக்களுக்கும் கொடிகளுக்கும் உரமாகு
அவைகள் உன்னை காப்பாற்றினால் காப்பாற்றும்
தற்காலிக மரணத்தில் நீ
இந்த உலக தாயின் அடிமடியில்...
Subscribe to:
Post Comments (Atom)
நன்று பால்., மரிப்பது தற்காலிகமான ஒன்றுதான் அதனை பயமில்லாமல் எதிர்கொண்டால்.சூழ்சிகளை கடக்க முதலில் பயத்தை தாண்ட வேண்டும், ரோஜா செடியின் குறியீடோடு சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது நண்பா.
ReplyDeleteவா நண்பா ஒன்றாய் உரமாவோம்.
அந்த படம் நிஜமாகவே பயமுருத்துகிறது உங்கள் கவிதையோடு பார்த்தால்.
ReplyDelete