
எங்கிருந்து வந்தேன் தெரியவில்லை
வந்துவிட்டேன்
எனக்கு முன் கால்தடங்களிருந்தது
தொடர்ந்து விட்டேன்
நடந்துகொண்டேயிருப்பேன்
இந்த பாதை எனக்கானதா...
இந்த புவியில் நான் புதியவனா
அல்ல மீண்டும் பிறந்தவனா
எனக்கு சுதந்திரமுண்டா அல்ல
கட்டுப்பாடுகள் உண்டா
என் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும்
சங்கிலி யார் கைகளில் உள்ளது...
எனது பாதை நீண்ட தூரமானதா
அல்ல சிறிய தூரமானதா
நான் போய்கொண்டிருக்கிறேனா
அல்ல வந்துகொண்டா
நான் நடக்கிறேனா
அல்ல பாதை நகர்ந்து கொண்டிருக்கிறதா
அல்ல இருவரும் நின்றுகொண்டு
காலம் நகர்ந்து கொண்டிருக்கிறதா...
நான் மனிதனாக மறுவதற்க்கு முன்
நீங்கள் என்னை பார்தீர்களா
நான் சூன்யமா அல்லது ஏதாவதா
என்னுடைய கேள்வி உங்களுக்கான
விடையா அல்லது உங்களுக்கான
கோடிட்ட இடங்களில்
என் கேள்விகள் விடைகளாக
நிறப்பப்பட்டுள்ளதா
வெறுமையான காகிதத்தை
நிறப்புவதற்க்கு விடைகளற்ற
கேள்விகளோடு நான்...
என் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும்
ReplyDeleteசங்கிலி யார் கைகளில் உல்லது...
entha varthaigalukkana vidayaithaan
naan endru varai thedikondu irukken paul ..
simply superb !
//என் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும்
ReplyDeleteசங்கிலி யார் கைகளில் உள்ளது...//
ஏதாவது ஒரு வகையில் நம் அனைவருக்கும் இது பொருந்தும்... இதைத்தான் ஆங்கிலத்தில் 'commitment' என்று சொல்வார்களோ...
நன்றி யோகா ஆம் அது கமிட்மெண்ட்தான்
ReplyDelete