சில வார்த்தைகளில்
என் இதயம் கிழிக்கப்பட்டது
என் வலிகளில் இருந்து
தனிமையே பிறந்தது
பொய்களுக்கு பின்னிருந்து
என் வாழ்க்கை எட்டிப்பார்கிறது
கனவுகள் சிதைந்தும் சிதைத்தும்
நம்பிக்கை கண்களிழந்து
அன்பு மங்கியதாய்
சிதையெரிக்கப்பட்டு
எப்போதும் காணாத
பிரபஞ்சம் நோக்கி சாம்பலாய்
எது முன்பு அன்போ
அது இப்போது சாம்பலாய் காற்றில்
அந்த பொய்கள்
என் கண்களின் முன்னே
தீய்ந்த தசைகளுடன்
பொய்களின் விதைகளுக்கு
நீரூற்றியே காற்றில் கலந்து
கிழிப்பதற்க்கு இன்னொரு
இதயம் தேடி...
No comments:
Post a Comment