Wednesday, November 25, 2009

நான், என் நண்பர்கள், துரோகம் ...



அவர்கள் என் நண்பர்கள் இன்னமும் நண்பர்களே
ஆனால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்
கொலைசெய்யும் அளவிற்க்கு
என் நண்பனாய் இருந்ததற்க்கு வருந்தினர்
நான் மெலிந்து இறுதிக்கு தவழ்ந்து செல்கிறேன்
ஆழ்மனதில் என் இதயத் துடிப்பு எனக்கு கேட்கிறது
உறக்கமின்றி நான் துவக்கமின்றி முடிக்கிறேன்
பார்வை மங்கியது இருளாய்
லேசான வலி இதயத்தில்
நான் வீழ்ந்ததில் என்னிடம் சண்டையிட ஆயித்தமாயினர்
மூலையில் மாட்டிக்கொண்டேன் என்னை மிதித்தனர்
குருதி கொட்டும்வரை அடித்தனர்

எனக்கெதிராக அனைவரும்
என் தசைகளை தின்றனர்
வசைசொற்களை ஏவினர்
என்னை சபித்தனர் வார்த்தைகள் என்னை துளையிட்டது
கிழிந்தவனாய் தரையில் நொறுங்கியே
ஓடி ஒளிந்தேன் முடிவென்று நினைத்தேன்
இன்னமும் தேடினர் சண்டையிட்டனர்
என் மிகசிறந்த நண்பர்கள்

என் குரல் கிழிந்து கத்துவதை
ஒருவரும் கேட்கவில்லை
என்னுள் நான் எரிந்து கிடப்பதையும்
என் தசைகள் உரிந்து குருதி வழிவதையும்
என்னைத் தவறாய்ப் புரிந்தவர்கள் என் நண்பர்கள்

என் வெற்றிடத்தில் வெறுப்பினை நிரப்பி
அனைவரும் நகர்ந்தனர்
என்னை நினைப்பர்

என்னை உற்று பாருங்கள் என்னுள் பாருங்கள்
நான் நஞ்சு அவர்களுக்கான விஷம் தொய்ந்த கத்தி

என் இதயத்தை இன்னமும் திறந்தே வைத்திருக்கிறேன்
அவர்கள் மீண்டும் மிதிப்பதற்காக காத்துக்கிடக்கிறேன்

என் கண்களில் வழியும் கண்ணீர் எனதன்று
அவர்கள் ருசிக்கும் அழுகிய திரட்சை ரசம்
நான் அவர்களுக்கான கண்ணிர் துடைக்கும்
விலையுயர்ந்த கைகுட்டை
நான் அவர்களுக்கான குரல்
அதை நான் மட்டுமே கேட்பேன்
என் அழுகைக்காக காத்துநின்றனர்
நான் மரிப்பேனென்று நினைத்தனர் மகிழ்ந்தனர்
அவர்களின் துற்நாற்றத்தை நான் சுவாசித்தே கிடக்கிறேன்
எல்லாம் முடிந்தது
நன்றி நண்பர்களே
உங்களின் பாதங்களின் அடியில் என் சிரசின் மொத்தம்...


சந்திரா அக்காவிற்காக ...

3 comments:

  1. நண்பர்கள் நமக்கு துரோகங்களை கற்றுக்கொடுக்கும் மிகப்பெரிய ஆசிரியர்கள்.அவர்களிடம் நாம் ப்ரியமாகத்தான் இருக்கமுடியும் தம்பி. அதை மிக அழகாக பதிவுசெய்திருக்கிறாய். எனக்கு இந்தக் கவிதையை சமர்பித்ததற்கு நன்றி

    ReplyDelete
  2. We need to learn everything from our false friends only.
    everybody should overcome this problem then only we can find whats real and whats fake.

    என் இதயத்தை இன்னமும் திறந்தே வைத்திருக்கிறேன்
    அவர்கள் மீண்டும் மிதிப்பதற்காக காத்துக்கிடக்கிறேன்

    Waiting for people !!!

    ReplyDelete
  3. Manithanaaye pirandhavan,.....
    Vaazha Vendumendraal?.... Mudhalil
    Veezhethalai Arindhu kolla Vendum...
    Andha vazhevin Veezhthalaiyum Kattru koduthu..
    Vaazhavum Vaippaargal....
    NANBARGAL..........

    ReplyDelete