Tuesday, November 24, 2009
முகமூடி அணிந்து கொண்டே
அந்த நீண்ட கருமையான தனிமையில்
நான் என்னிடம் கேட்பது
இன்னும் எத்தனை நாள்
இப்படி போகுமென்று
நான் கடுமையான முகமூடி அணிந்து கொள்கிறேனா
என்னிடமே போலியாய் வாழ்வதற்கு
அல்ல உண்மையில் நான் பிழைத்துகொண்டேனா
வாழ்வதற்கு தகுதியற்ற நாட்களுக்காக
எனக்கும் ஆன்மா உண்டு
எழிச்சியான அலைகளில் மிதந்து கொண்டு
அந்த தீவை அடைவதற்கு
அங்கு எப்போதும் வசிப்பதற்கு
நான் யாரென்று எனக்குத்தெரியாது
எனக்குத்தெரிந்ததெல்லாம் யோசிக்காமல்
இருப்பது எப்படி என்று
என் நிலையில் வருந்தாமல்
எப்போது சிரிக்கவே நான் விரும்புகிறேன்
நான் மேல்நோக்கியே எழுகிறேன்
என் பாதையை அப்படியே அமைக்கிறேன்
வாழ்வுக்கான கேள்வியை நான் வெறுக்கிறேன்
காரணம் நான் அழுவதையும் என்னால் ஏற்க முடியாது
என்னுடைய தனிமையான பொழுதுகளில்
நான் சிரிக்கவே செய்கிறேன் ஏனென்றால்
நான் என்னிடமே இருக்கிறேன்
முடிவில் அதுவும் எனக்கு போதவில்லை...
Subscribe to:
Post Comments (Atom)
ஆக்ஸிஜனற்ற மனதின் அடியாழங்கள் அலைக்கழிப்பு நிறைந்தவை, அது தொடர்தலின் நம்பிக்கையை, நுழைவுக் கட்டனமென, ஒரு கடன்காரனின் முகத்தோடு வசூலித்து கொள்கிறது, உண்மையின் உலைக்கடங்களைவிட, சமரசங்கள் சுகமெனக் கொண்டாயிற்று. நெறுப்பைக்காட்டிலும் வெதுவெதுப்பு இதம், வெதுவெதுப்பென்பதும் குறைந்த நெறுப்பே...
ReplyDeleteஎழுத்துக்களில் எண்ணம், எண்ணங்களை எழுதவே எழுத்து பால்க்கு....:)
//
ReplyDeleteநான் யாரென்று எனக்குத்தெரியாது
எனக்குத்தெரிந்ததெல்லாம் யோசிக்காமல்
இருப்பது எப்படி என்று
என் நிலையில் வருந்தாமல்
எப்போது சிரிக்கவே நான் விரும்புகிறேன்
//
Simply superb paul !