என் கூர்மையான
கத்திகளே என்னை
காதலியுங்கள்
என் தோலினை
கூறுபோட்டு அண்டம் ஒலிக்க
என்னை கூச்சலிட செய்யுங்கள்
ஆழமாய் பாய்ந்து
என்னை ஓலமிட்டு
விம்மி அழச்செய்யுங்கள்
என் தசைகளை
அறுத்து குருதியினை
வாரி இறைத்திடுங்கள்
இந்த பிரபஞ்ச சிறைக்குள்ளிருந்து
என்னை விடுவியுங்கள்...
No comments:
Post a Comment