
நான் யாரோ
உயிருள்ள போலி மனிதர்களை
கடந்து செல்கிறேன்
என் கண்களை
அந்த கண்ணாடியில் பார்த்து அழுகிறேன்
அதில் எனக்கு தெரியாத
ஒருவரை பார்கிறேன் ஆனால்
ஒரு நண்பனை சந்திக்கிறேன்
அதை கடக்கையில் திரும்பிப்பார்க்க
எனக்கு தலையிருக்கிறது இப்போது
அவனை தொலைக்கையில் நான்
என்னை பற்றி தெரிந்து கொண்டேன்
காதலை பற்றி நினைக்கையில்
பலத்த காயங்களுடன் தவித்தேன்
நான் மீண்டும் அந்த வட்டத்துக்குள்
பாறைகள் மிகுந்த மலைமீது நான்
கழுகுகள் என் தலைமீது வட்டமிடுகிறது
என்னை பற்றிய அவதூருகளை கேட்கிறேன்
நான் இருப்பது அறியாது புலம்பியவர்களிடமிருந்து
என்னை தாக்கியும் நான் அழாததை கண்டு
நான் பலமாயிருப்பதை உணர்கிறேன்
நான் யாரென்று தெரிந்துகொண்டேன்
நான் யாரோஒருவரில் இருக்கையில்
நானும் தொலைந்துத்தான் போயிருந்தேன்
என் நண்பன் என்னை கண்டறியும்வரை
என் வாழ்க்கை என் கைகளில்
அதை இறுக்கமாய் பிடித்திருக்கிறேன்
அடகு வைக்கப்பட்டவனாய் நான்
சரணடைகிறேன் அவரில்
போரட்டங்களின் இடைவெளியில் நடக்கிறேன்
போராட்டங்களை வெறுக்கிறேன்
நான் நானே இன்னமும்
நான் யாரோ ...
//நானும் தொலைந்துதான் போயிருந்தேன்
ReplyDeleteஎன் நண்பன் என்னை கண்டறியும்வரை
//
அந்த நண்பனை கெட்டியாக பிடித்துக்கொள் பால்!
நன்றாக இருக்கிறது...
நீ நீயாகவே இருந்தும் யார் என்ற தெரியாத இது குழப்பமா இல்லை திரிலோக சொர்க்கமா.....
ReplyDeleteசில வேளை யார் என்று அறியாமல் இருப்பதும் சுகம் தான்...
அந்த சுகம் உணர்கிறாயோ... அன்பே...
இத்தனை கடந்தும் இன்னும் இறுக்கமாக தான் பிடித்திருக்கிறாய் வாழ்வை...
நீயும் வெல்வாய்... தெளிவாய்... சிரிப்பாய்...
என் கண்களை
ReplyDeleteஅந்த கண்ணாடியில் பார்த்து அழுகிறேன்
அதில் எனக்கு தெரியாத
ஒருவரை பார்கிறேன் ஆனால்
ஒரு நண்பனை சந்திக்கிறேன்
silarathu yatharththam...
nice