Sunday, November 8, 2009
தனிமையான அந்த சாலையில்
என் சுமையான நினைவுகளை
தூக்கி தனிமையான கால்கள்
நீண்ட அந்த சாலையில்
யாருமற்று தூரத்து நீர்தேக்கமாய்
சாலையில்
புழுதியின் சுவாசம்
முதல் மழைதுளியை
நினைவுபடுத்தி
தனிமையான அந்த சாலையில்
எதற்காகவும் வருந்தாதவனாய்
இந்த கொடூர தேசத்து பிடியிலிருந்து
எங்கு அன்பு விதைக்கப்பட்டிருக்கிறதோ
அங்கு செல்ல
நான் அந்த சாலையில்
சுமையின் பாரம் என் எலும்புகளை
நொறுக்கி
ஒவ்வொரு நாளும் களைப்பாய்
நிற்கிறேன் சுமையுடன்
நான் அந்த சாலையில்
உன் செவி இந்த பூமியின்
சுழற்ச்சியில் இருந்தால்
உன்னோடு
என்னை அழைத்து செல்
எங்கே விதி எழுதப்படாதோ அங்கே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment