Monday, May 3, 2010

ஒளியும் நானும் ...






நான் சாலையில் நடந்து வருகையில்
அந்த நிலவே என்னை தினமும் இரவில் பின் தொடர்கிறாள்
என் சாலைக்கும்
என் கால்களுக்குமான
தொடர்பு நெருங்கி கொண்டே போகிறது!
ஒளி என்னை கடக்கையிலும்
நான் ஒளியை கடக்கையிலும்
இருளை நினைவுப்படுத்துகிறது அந்த தருணங்கள்
பயமாய் இருக்கிறது எனக்கு
சாலைகளில் ஊர்ந்து வரும் வேகமான வாகனங்களில்
என்னை இணைத்துக்கொள்ள பல நேரங்களில் எண்ணம்
என் கோழைத்தனம் அதை தினமும் தள்ளிப்போட்டு கொண்டே இருக்கும்
என்னுடைய நினைவுகளை கைப்பிடித்துக்கொண்டே
நான் தினமும் எண்ணிக்கையற்ற தூரத்தை கடந்தே செல்கிறேன்.
நான் மையமான அன்பை தேடியே என் நாட்களை நகர்த்துகிறேன்
தெருவிளக்கில் படித்த நண்பனை பார்த்தப்போதெல்லாம்
ஒளியின் அவசியம் என்னுள் புகுத்தப்பட்டிருக்கிறது!
நான் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை
ஒளியே தீர்மானிக்கிறது!
என் இரவுகளில் நேர்கோட்டில் பயணம் செல்லும் ஒளி
சற்று அலைவடிவில் பயணித்தால்
நாம் என்னவாக மாறியிருப்போம்
என்பதை என்னால் யூகிக்கமுடிகிறது
எனக்கு ஒளி தேவை
என்பதை மெல்ல உணர்கிறேன்
இருளின் வக்கிரம் ஒளியால் முடக்கப்படுகிறது
என்பதை என் பயணம் கற்றுத்தருகிறது....

6 comments:

  1. //இருளின் வக்கிரம் ஒளியால் முடக்கப்படுகிறது
    என்பதை என் பயணம் கற்றுத்தருகிறது//

    Superb lines...
    It shows that you're a cinematographer...



    //தெருவிளக்கில் படித்த நண்பனை பார்த்தப்போதெல்லாம்
    ஒளியின் அவசியம் என்னுள் புகுத்தப்பட்டிருக்கிறது!//

    You wrote about 'a part of India'.
    Great...


    Fred.

    ReplyDelete
  2. //ஒளி என்னை கடக்கையிலும்
    நான் ஒளியை கடக்கையிலும்
    இருளை நினைவுப்படுத்துகிறது அந்த தருணங்கள்//

    I should agree with Freddy here. Obviously, since you look at life through your eyepiece and since light is what gives you the essence of your career, these lines are reflecting on that core.

    //நான் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை ஒளியே தீர்மானிக்கிறது!//

    brilliant

    ReplyDelete
  3. excellent bro !

    சாலைகளில் ஊர்ந்து வரும் வேகமான வாகனங்களில்
    என்னை இணைத்துக்கொள்ள பல நேரங்களில் எண்ணம்
    என் கோழைத்தனம் அதை தினமும் தள்ளிப்போட்டு கொண்டே இருக்கும்
    என்னுடைய நினைவுகளை கைப்பிடித்துக்கொண்டே
    நான் தினமும் எண்ணிக்கையற்ற தூரத்தை கடந்தே செல்கிறேன்.

    its been a long time from uuuuu !

    ReplyDelete
  4. nandri anaivarukkum aamaam vegu naatkalaiyina ezhudhi sagothara... ennudaiya payana thoora neendukondae pogirathu adhanaal ezhudhuvadhu konjam kadinamaga uladhu ini niraya ezhudah muyarchikiren ..... @ fredric oliyum naanum oru sera valardhom adhanaal ennaiyum adhaiyum piripadhu konjam kadinamae @ vettipulla nandri
    neenga thavarama ennoda ellathaiyum padichi vimarsanam seyradhu ennaku innum ezhudha ookam koduthirukku ... ennudaiya payanathai oli theermanikiradhu ....

    ReplyDelete
  5. எனக்கு ஒளி தேவை
    என்பதை மெல்ல உணர்கிறேன்
    இருளின் வக்கிரம் ஒளியால் முடக்கப்படுகிறது
    என்பதை என் பயணம் கற்றுத்தருகிறது....

    ReplyDelete
  6. என் இரவுகளில் நேர்கோட்டில் பயணம் செல்லும் ஒளி
    சற்று அலைவடிவில் பயணித்தால்
    நாம் என்னவாக மாறியிருப்போம்
    என்பதை என்னால் யூகிக்கமுடிகிறது - Nalla irukku....

    ReplyDelete