Tuesday, January 26, 2010

அவளொரு பட்டாம்பூச்சி...




ஒரு பட்டாம்பூச்சி என் கண்முன்னே
சரியான பாதையவளுக்கு தெரிந்திருந்தது
அவள் இங்கும் அங்கும் சிறகடிகிறாள்
என் விரல்களில் தானாய் வந்தமர்கிறாள்

அவள் சிறகுகளில் படிந்த வண்ணமாய்
சூரியனின் ஒளி ஓவியமாய்
நிச்சயமாய் சொல்லுகிறேன்
அவள் பாடுவதை நான் கேட்கிறேன்

அவள் வண்ணம் ஊதாவும் வெளிர்சிவப்பும்
அவளை பார்த்த கணத்தில்
என்னுள்ளிருந்த வெறுமை மூழ்குவதை
நான் உணர்கிறேன்

என் இதயத்தின் ஈரம் உருக துவங்கியது
வெப்பம் அதற்கு மாற்றாக
இதற்கு முன் இது எனக்கு நேர்ந்ததில்லை

அவள் கடைசி பாடலை என் காதில் பாடி
உயர சிறகடித்தாள் என் மனதில்
அவளை இழந்தாள் நான் இறப்பேன்


திடீரென அவள் குரல் தெளிவாய்
என்னை உன்னால் இழக்க முடியாது
உன் அருகில் நான் எப்போதும் என்றாள்

நான் என் வீட்டை தோட்டமாய் மாற்றினேன்
மலர்களை நிரப்பினேன்
அவள் எப்போதும் பறந்தே என்னை சுற்ற

தினமும் அவளை பார்த்தே கிடக்கிறேன்
இப்போது எனக்கும் தெரிகிறது
சரியான பாதை...

5 comments:

  1. வாழ்வும் என்றும் வண்ணமயமாகவும் வாசனைமிக்கதாகவும் இருக்கட்டும் உனக்கு, என் நட்பே.....

    ReplyDelete
  2. 'என் இதயத்தின் ஈரம் உருகத் துவங்கியது' தம்பி உன் கவிதையில் உருகி ஓடும் இசையை உணர்கிறேன்.வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete
  3. ///என் இதயத்தின் ஈரம் உருக துவங்கியது
    வெப்பம் அதற்கு மாற்றாக
    இதற்கு முன் இது எனக்கு நேர்ந்ததில்லை ///
    INI adikkadi itthakaya tharunangal
    naerattum..
    nalla kavidhai..
    oru thaedal therikiradhu..
    already ive visited you ..
    but knowing and visiting is like a butterfly taking nectar from its own self..
    maenmaelum niraya ezhudhanum..
    appuuram adhai engalukku face bookkil tag pannanum..
    ungal payanangal anaiththum sirakka ungal saalaigal thunai puriyattum endra vaaazhththukkaloedu..
    -akkaa..

    ReplyDelete
  4. //அவளை பார்த்த கணத்தில்
    என்னுள்ளிருந்த வெறுமை மூழ்குவதை
    நான் உணர்கிறேன்//

    U are in love ;)

    ReplyDelete
  5. //திடீரென அவள் குரல் தெளிவாய்
    என்னை உன்னால் இழக்க முடியாது
    உன் அருகில் நான் எப்போதும் என்றாள்//

    That's what love.
    I think you're writing
    about true love...

    Fred.

    ReplyDelete