Thursday, February 18, 2010

நீ உறங்குகையில்



நீ உறங்குகையில் தான்
எனக்கு எத்தனை கனவு
உன் சன்னல் கம்பியில் சிட்டுகுருவிகள்
சத்தமின்றி காதல் செய்கின்றன
நானிட்ட மோதிரம்
உன் விரல்களை நெரித்தாலும்
அதை கழட்டுவதில்லை நீ
ஆயிரம் ஆயிரமாண்டு பின்னோக்கி
நகர்ந்தாலும் உன் காதலுக்கு இணை
உன் காதல் மட்டுமே
என் இத்தனை நாட்களின் எண்ணிக்கையை
நீ தூங்கிய ஒருகணத்தில்
மரணிக்க செய்தாய்
வெந்நிற பறவையாய் எனக்குமுன்
என்னை நினைத்து எனக்காக
கணவுகளில் மிதக்கும் அன்னம் நீ
வேட்டையாட முடியாத வேடன் நான் ...



3 comments:

  1. கலக்கல் நண்பரே... அழகான வார்த்தைகள்... தொடர்ந்து எழுதுங்கள்... அதுவும் என் இத்தனை நாட்களின் எண்ணிக்கையை நீ தூங்கிய ஒரு கணத்தில் மரணிக்க செய்தாய்.. அருமை..

    ReplyDelete
  2. //என் இத்தனை நாட்களின் எண்ணிக்கையை
    நீ தூங்கிய ஒருகணத்தில்
    மரணிக்க செய்தாய்//

    நல்ல வரிகள்... :)

    ReplyDelete
  3. நானிட்ட மோதிரம்
    உன் விரல்களை நெரித்தாலும்
    அதை கழட்டுவதில்லை நீ

    Superb...

    ReplyDelete