Saturday, October 24, 2009

அவள் என்றால் அப்படி எனக்கு



இனிய கல்லாக
மறை பயத்துடன்
அவள் என்னை காதலித்தாள்
யாரும் அறியாமல்

பூட்டிய உணர்வுக்குள்
உருளாமல்
உறைந்த மௌனமாய்
துவக்கமும் முடிவுமின்றி
அகராதிக்குள் சிக்காமல்

அவள் இதயம் தங்கம்
அவள் மொழி இனிப்பு
என்னை குருடனாக்கிய
அழகான பேரொளி...

அன்பு மட்டுமே அனாதையாய்




ஒரு பிடி சோறும்
சிறு துளி நீரும்
கிடைக்காத என் தேசம்
விலைக்கு வாங்க
அன்பு மட்டுமே பிரம்மாண்டமாய்

தோலினை ஆடையாய்
தோல்வியை தோரணமாய்
ஏங்கிய விழிகளை
முதியோர் என கூறிடும்
அன்பு மட்டுமே முதுமையாய்

தரும் கைகளின்றி
பெரும் கைகள் இன்று
பெருகி பெருகி
ஏந்திய தேசமாய் கையேந்திய தேசமாய்
அன்பு மட்டுமே அங்குமிங்குமாய்

வீட்டிற்க்குள் கடல் வந்தாலும்
வீனர் நெஞ்சுக்குள் வந்தாலும்
அலை அலையாய்
சிலை மனதாய் சிற்பமாய்
அன்பு மட்டுமே அனாதையாய்...

நான் நானாய்




மெல்லிய தென்றலாய் அந்த மரத்தின்
கிளைகளின் இடைவெளியில் நுழைந்து
தேனீக்களின் இறக்கையாய் வேகமாய் சுற்றி
வயல்வெளி பூக்களாய் விதைக்காமல் வளர்ந்திடுவேன்
ஆனால் ஆழ்கடலின் அமைதியாய் இதை நிகழ்த்திடுவேன்

என்னுடைய சிரிப்பு சற்று பிரகாசமாய்
அன்பு சரியான அளவாய் இருக்கும்
என்னுடைய இந்த பயணம் குறித்து
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
அழுகிய திராட்சையின் வாடை என் வாழ்வில் வீசிய போதும்

உங்களுக்கான சராசரி ஆண் நான் கிடையாது
ஆடம்பரம் எனக்கு தெரியாது
அன்பும் சுயமரியாதையுமே என்னுடைய பேராசை
உன்மையாய் எப்பொழுதும் நடந்திடுவேன்

நான் நானாகவே இருக்கிறேன்
இளமையாய் கருப்பாய் அழகாய்
என் திறமையைய் முழுமையாய் காட்டுவேன்
என்னுடைய இயல்பை என்னால் மாற்ற இயலாது
அதற்காக நான் நானாய்...

வானம்..





கொட்டிய மழை வீதியில் அல்ல

என் வீட்டுக்குள் தேங்கியது

என் வீட்டுக்கு கூரை வானம் !!!!

சிவப்புவிளக்கு




உணர்விலா மனிதர்கள்
ஊர் முழுதும் பயணம்
ஊனமுற்ற நெஞ்சங்களின்
ஆடம்பர பவனி ஓய்வெடுக்க மின்னியது
சாலையோர சிவப்புவிளக்கு தண்ணீரும் விலைக்கு
தன்மானமும் விலைக்கு
கையில் குழந்தையும்
கண்ணில் கண்ணீரும் ஒரு கை நீட்டியபடி
நின்றாள் அவள்
யார் சொன்னது
சிவப்புவிளக்கு அபாயமென்று......

இரவில் எங்கோ ஓரிடத்தில்




இரவில் எங்கோ ஓரிடத்தில்

குழந்தையின் அழுகை
பெண்மையின் விசும்பல்
பெயர்தெரியாதவரின் மரணம்
மனிதநேயத்தின் கண்ணாமூச்சி

ஆன்மாவின் அலறல்
தூரத்து மனிதர்களின் பயணம்
கனவுக்குள் தொலைந்தவர்
உண்மையின் வாழ்க்கை

தனிமையின் இருப்பிடம்
அமைதியின் மறைவிடம்
அற்புதமான ஓய்வு


எங்கே ஒளி
இரவில் எங்கோ ஓரிடத்தில்...

Tuesday, October 20, 2009

தரையை நோக்கி




நான் நேர்மையானவன் கிடையாது
அப்படி இருக்கவும் என்னால் முடியாது
சிறையில் தவிக்கும் மூர்க்கமான ஆன்மா
நான் இப்போது வெளியில் வர போகிறேன்

இந்த இடத்தில் இனியும் வசிக்க என்னால் முடியாது
கண்ணீர் விடவும் முடியாது
என்னுள் என்னை மறைத்து வாழ என்னால் முடியாது
இப்படியே காலம் முழுவதும் கரைந்து விட முடியாது

என்னுடைய உணர்வுகளை உங்களிடம் காட்டவும்
அல்லது சொல்லவும் என்னால் முடியாது
எனக்கு உன்மைக்கும் போலிக்குமான வித்தியாசம்
தெரிந்தால் மட்டும் போதும்

நான் தொலைந்த இன்னுமொரு ஆன்மா
உங்களிடம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்
நான் உங்களுக்கு கடனாக தெரிந்தால்
உங்களை சுற்றி வருவதை நீங்கள் விரும்புவதில்லை

தரையை நோக்கி வானிலிருந்து விழும்
உயிர் உள்ள உடல் நான்
சிறிய தூரமே உள்ளது விழுவதற்கு
என்னை ஏந்துவதற்க்கு கைகளை
நான் அங்கு எதிர்பார்க்கவில்லை

என்னை பற்றிய கவலை
யாருக்கும் இங்கு இல்லை
என் நலம் கேட்பதற்க்கும்
இங்கு ஒருவரும் இல்லை...

வலி





தாக்க பட்ட பறவை
வானிலிருந்து விழும்
போதும்
உண்மை பொய்யுரைக்கும்
போதும்...

வேகமான அலை கரைக்கு
வரும் போதும்
மழை மேகம் தூராமல்
செல்லும் போதும்...

காதலியின் முதற் பார்வையில்
மறைபடும் போதும்
அவளின் இதயத்தில் கோபம்
தென்படும் போதும்...

கோடையில் சூரியன் ஒளிரும்
போதும்
மாலையில் பௌர்ணமி மேகத்தில்
மறையும் போதும்...

பசித்தவனுக்கு கடைசி வாயும்
மரிப்பவனுக்கு கடைசி இரவும்
உறங்காத இரவில் அழகான மடியும்
கலங்காத என்னில் இதெல்லாம்
நிச்சயம் வலியே...