என் கண்களின் வழியாக
வழிந்து கொண்டிருப்பது
வார்த்தைகளைவிட மேலானவை
அவை என்
இதயம் பேசும் மொழி
என் உணர்வுகள்
என் ஆழ்மனதின் சிறுகதை
உனக்காகவே அதை வெளிகொணர்கிறேன்
இந்த மேசையின் மீது
வைக்கப்பட்டிருக்கும்
இதயமும்
ஆன்மாவும்
உனக்காக காத்துகொண்டிருப்பது
புரிகிறதா
என்னை ஊமையென
நினைத்துவிடாதே
நான் உள்ளே
மரித்துக்கொண்டிருக்கிறேன்
இன்னமும்
உனக்கு புரியவில்லையா
ஆம்
மௌனம் இதுவரை யாருக்கும்
புரியாத காதலின் மொழி . . .
நீங்க கேமராவில் கவிதை எழுதறவருன்னு தப்பா நினைச்சுட்டேன்!!! அருமைங்க!!!
ReplyDelete