Monday, August 9, 2010

எனக்கு முத்தமிடுங்கள்

எதை நோக்கி பயணிக்கிறேன் என்பதை அறியாமல்

பயணிக்கிறது எனது கால்கள்

வாழ்கையை கடன் வாங்கி

துவங்குகிறது எனது நாட்கள்

கருப்பாய் வருகிறது கனவு

சிவப்பாய் இருக்கிறது நிஜம்

சிலுவை சுமக்க அச்சமில்லை

அதன் மீதுதான் படுத்துக்கிடக்கிறேன்

ஆணி அடிக்க காத்துக்கிடக்கிறேன்

முத்தமிட எனக்கு யுதாஸ் இல்லை

காத்துகிடக்கிறேன் எனக்கு யாராவது முத்தமிடுங்கள்

என்னை சிலுவையில் ஏற்றுங்கள்

மீண்டும் உயிர்த்தெழ எனக்கு உதவி செய்யுங்கள்.....

4 comments:

  1. 'சிலுவை சுமக்க அச்சமில்லை

    அதன் மீதுதான் படுத்துக்கிடக்கிறேன் '

    I don't have comment for that but I like those lines.

    Fred

    ReplyDelete
  2. எனக்கும்
    முத்தமிடுங்கள்.. தயவுசெய்து.. யூதாசுகள் நிறைய இருந்தும் ஏன் தயக்கம்..

    ReplyDelete
  3. என்னை சிலுவையில் ஏற்றுங்கள்
    மீண்டும் உயிர்த்தெழ எனக்கு உதவி செய்யுங்கள்..... இந்த வரிகளுக்குள் தான் இந்த கவிதையின் மொத்த உயிரும் உள்ளது..

    ReplyDelete