Thursday, June 3, 2010

உன் கருவறைக்குள்




நீ என்ற ஒரு சொல் நானாக இங்கு நிலைக்கிறது.
உன்னோடு இருந்த ஒவ்வொரு தருணமும்
உன் கருவரைக்குள் வளர்ந்ததாகவே உணர்ந்தேன்,
உன் கண்ணீர் கன்னங்களில் வழிந்ததை
நான் பார்த்த போதெல்லாம்
என் ஜீவன் வழிந்ததாகவே எனக்கு நீ நியாபகப்படுதினாய்
உன் பாதத்திற்கும் செருப்புக்கும் இடையில்
சிக்கிய கல்லாய் நான்
உறுத்தலோடு நீ. பாதையை கடக்கிறாய்,
காலுக்கடியில் அல்ல நான்
உன் கருவறைக்குள்
கருவாய் உன் ஜீவனாய்
இப்போது காதலியே அன்னையாய்,
நான் பேருபெற்றவன் ஏனெனில்
இந்த காதலும் தாய்மையும் ஆளும்
விண்ணரசு என்னுடையது...

3 comments:

  1. தம்பி தீவிரமாக இருக்க போலிருக்கு வாழ்த்துக்கள். முதன் முறையாக சிரிய கவிதை அழகான வடிவில். 'உன் பாதத்திற்கும் செருப்புக்கும் இடையில்
    சிக்கிய கல்லாய் நான்'சிறப்பான வரிகள்.

    ReplyDelete
  2. தல கலக்குங்க தல... "உன் பாதத்திற்கும் செருப்புக்கும் இடையில் சிக்கிய கல்லாய் நான்உறுத்தலோடு நீ" - Superb lines

    ReplyDelete
  3. 'உன்னோடு இருந்த ஒவ்வொரு தருணமும்
    உன் கருவரைக்குள் வளர்ந்ததாகவே உணர்ந்தேன்'

    They're awesome. Boys only can feel those words.

    Fred.

    ReplyDelete